லாரி மரத்தில் மோதிய விபத்தில் ஓட்டுநர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பொட்டியம் கிராமத்தை பிரகாஷ்(24) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கருமந்துறை பகுதியில் தங்கி லாரி ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பிரகாஷ் மின்னாம்பள்ளியில் இருந்து டிப்பர் லாரியில் ஜல்லிக்கற்கள் பாரம் ஏற்றிக் கொண்டு கல்வராயன்மலை கருமந்துறை நோக்கி சென்று கொண்டிருந்தார். அதே பகுதியை சேர்ந்த ஆண்டியப்பன் என்பவர் பிரகாஷுடன் சென்றார். இந்த லாரி பேளூர்- அயோத்தியாப்பட்டணம் சாலையில் சந்திரப்பிள்ளை வலசு கிராமத்தில் சென்று கொண்டிருந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த புளியமரத்தில் பலமாக மோதி நின்றது.
இதில் லாரியின் முன்பகுதி சுக்குநூறாக நொறுங்கியது. இந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி உடல் நசுங்கி பிரகாஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து படுகாயமடைந்த ஆண்டியப்பனை அக்கம்பக்கத்தினர் மீட்டு வாழப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்த விபத்து குறித்து வாழப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Post Views:
0