நடன நிகழ்ச்சியில் பாம்புகளை துன்புறுத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மதுரை மாவட்டத்திலுள்ள கீழக்குயில்குடி பகுதியில் இருக்கும் கோவிலில் திருவிழா நடைபெற்றது. அப்போது நடன நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிலையில் பாம்புகளை வைத்து துன்புறுத்தி ஒருவர் நடனமாடியதாக மதுரை மாவட்ட வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி வனத்துறையினர் நடத்திய விசாரணையில் பாம்புகளை துன்புறுத்தி நடனமாடிய நபர் அப்துல்லா(47) என்பது தெரியவந்தது.
இதனை அடுத்து வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அப்துல்லாவை வனத்துறையினர் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக இருக்கும் நடன குழுவின் உரிமையாளர் கொடுமுடி என்பவரை வனத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
Post Views:
0