கடலூர் மாவட்டத்தில் போதை பொருள் தடுப்பு பற்றி போலீசார் பள்ளி, கல்லூரி மற்றும் பொதுமக்களிடம் கடந்த சில தினங்களாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றார்கள். அந்த வகையில் பரங்கிப்பேட்டை அருகே சின்னூர் மீனவ கிராமத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சிவராமன் தலைமை தாங்கினார்.
அவர் மீனவர் கிராம மக்களிடம் போதை பொருட்களினால் ஏற்படும் தீமைகள் பற்றி விளக்கியுள்ளார். மேலும் யாரேனும் போதே பொருட்கள் விற்பது பற்றி தெரிய வந்தால் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். இதில் மீனவ மக்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர். இதே போல கடலூர் மஞ்சங்குப்பம் செயின்ட் ஜோசப் கலை கல்லூரி, சிங்காரத்தோப்பு, தூக்கணம்பாக்கம், தென்னம்பாக்கம், புதுச்சத்திரம், வயலாமூர், பரங்கிப்பேட்டை, புதுப்பேட்டை,முத்தாண்டி குப்பம் போன்ற பகுதிகளிலும் நேற்று போதை பொருள் விழிப்புடன் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.
Post Views:
0