CMஸ்டாலின் சொல்லிட்டாரு…! ரொம்ப நேரம் சும்மா இருக்கு..! மினரல் வாட்டரில் தான் சுத்தம் செய்யணும்..!!


அம்மா குடிநீர் நிறுத்தப்பட்டது. அந்த பிளான்ட்கள் ஆவின் உடமையாக்கபடுமா என்ற கேள்விக்கு பதிலளித்த பால்வளத்துறை அமைச்சர் நாசர்,

எங்களைப் பொறுத்தவரை எங்களிடம் 25 பிளான்ட் இருக்கிறது.  எங்களுடைய 25 யூனியன் இருக்கிறது. அந்த யூனியனில் நாங்கள் இருக்கக்கூடிய பிளான்ட் சுத்தம் செய்வதற்கு மினரல் வாட்டரில் தான் சுத்தம் செய்வோம்… பால் டேங்க் அதை வந்து ஒரு முறை பால் வெளியே போய் விட்டது என்றால் அதை சுத்தம் செய்வதற்கு மெட்ரோ வாட்டர் அல்லது இருக்கக்கூடிய கிணற்று போர்வெல்லில் சுத்தம் செய்யக்கூடாது. அதை வந்து மினரல் வாட்டரில் தான் சுத்தம் செய்ய வேண்டும்.

அப்படி சுத்தம் செய்து, அதை நன்றாக உலர வைத்து, மீண்டும் பால் ஊற்ற வேண்டும். ஒரு நாளில் இரண்டு மணி நேரம் தான் செலவாகும். ஆக மீதி நேரம் எல்லாம் பிளான்ட் சும்மா தான் இருக்கிறது. அதை பொதுமக்கள் நலன் கருதி தமிழக முதல்வர் அவர்கள் அதை பயன்படுத்தி மக்களுக்கு குறைந்த விலையில் ஆவின் தண்ணீர் சப்ளை கொடுக்கலாம் என்று ஆய்வு செய்து இருக்கிறார்கள் என தெரிவித்தார்.

The post CMஸ்டாலின் சொல்லிட்டாரு…! ரொம்ப நேரம் சும்மா இருக்கு..! மினரல் வாட்டரில் தான் சுத்தம் செய்யணும்..!! appeared first on Seithi Solai.

Leave a Reply

Your email address will not be published.