“தி லெஜண்ட் படத்தின் ஒரு வார வசூல் எவ்வளவு தெரியுமா…?” அடேங்கப்பா…!!!!!!


தி லெஜெண்ட் திரைப்படத்தின் ஒரு வார வசூல் நிலவரம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.

சரவணா ஸ்டோர் விளம்பரத்தில் நடித்த கடையின் உரிமையாளரான சரவணன், அவர்களே விளம்பரத்தில் நடித்து பிரபலமானார். இவர் விளம்பரங்களில் முன்னணி நடிககைகளுடன் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் தற்போது ஹீரோவாக தி லெஜெண்ட் படத்தில் நடித்துள்ளார். இவர் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து அவரே தயாரித்துள்ளார். இப்படத்தின் கதாநாயகியாக பாலிவுட் நடிகை ஊர்வசி ரவ்தெலா நடித்திருக்கின்றார். இப்படத்தை ஜே.டி மற்றும் ஜெர்ரி இயக்கி உள்ளனர். மேலும் ஒரு பாடலுக்கு யாஷிகா ஆனந்த் நடனமாடியுள்ளார்.

இத்திரைப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இந்த நிலையில் சென்ற ஜூலை 28ஆம் தேதி திரையில் படம் வெளியானது. இத்திரைப்படம் 600-க்கும் அதிகமான திரைகளில் நாடு முழுவதும் 1200 திரைகளிலும் வெளியானதாக சொல்லப்பட்டது. இத்திரைப்படம் தமிழகத்தில் முதல் நாள் ரூபாய் 2 கோடி வசூல் செய்ததாக தகவல் வெளியானது. இந்நிலையில் இத்திரைப்படத்தின் ஒரு வார வசூல் குறித்த தகவல் வெளியாகியிருக்கின்றது. அதன்படி பாக்ஸ் ஆபிஸில் இத்திரைப்படம் 7 கோடி வரை வசூல் செய்திருப்பதாக செய்தி வெளியாகியிருக்கின்றது.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.