சீனாவில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா….. 2,30,886 பேருக்கு தொற்று உறுதி…. வெளியான தகவல்….!!!!


கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

உலக அளவில் இன்று பரவி வரும் கொரோனா வைரஸ் முதன் முதலில் சீனாவில் தான் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக கொரோனா தடுப்பூசிகள் போடப்படுவதால் தற்போது பாதிப்புகள் குறைந்து வருகிறது. கடந்த சில மாதங்களாக சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் நேற்று முன்தினம் 704 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதன் பிறகு நேற்று 868 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ள நிலையில், 478 பேருக்கு அறிகுறி இல்லாத கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5226 ஆக இருக்கும் பட்சத்தில் கடந்த 24 மணி நேரத்தில் எந்த ஒரு உயிரிழப்புகளும் ஏற்படவில்லை. மேலும் 2,30,886 பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.