கர்நாடக மாநிலத்தில் தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்ததையடுத்து அங்கு உள்ள அணைகளிலிருந்து காவிரியில் அதிகப்படியான உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த தண்ணீர் தமிழகத்தில் மேட்டூர் அணையை வந்தடைந்து அங்கு இருந்து உபரிநீராக வெளியேற்றப்படுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் காவிரி ஆற்றுப்படுகை பகுதியில் கடும் வெள்ளபாதிப்பு ஏற்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் திருச்சி முக்கொம்பிலிந்து காவிரியில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் அதிகளவு தண்ணீர் திறக்கபட்டுள்ளது. இதனால் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகில் தஞ்சை மாவட்ட எல்லையில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கேயுள்ள கீழணையிலிருந்து நேற்று வினாடிக்கு 1 லட்சத்து 90 ஆயிரம் கன அடி நீர் உபரிநீராக திறக்கப்பட்டது. பின் நேற்று மாலை வினாடிக்கு 2 லட்சத்து 15ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கீழணையிலிருந்து வல்லம்படுகையை கடந்து பழையாறு அருகில் வங்கக்கடலில் கலந்து வருகிறது. இந்நிலையில் கீழணையிலிருந்து காட்டுமன்னார் கோவில், சிதம்பரம் பகுதியின் வழியே செல்லும் கொள்ளிடம் ஆறு, கரையோர பகுதியில் பெரும் வெள்ளசேதத்தை ஏற்படுத்தி வருகிறது. பல்வேறு கிராமங்களில் நூற்றுக்கும் அதிகமான வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்து உள்ளதால் மக்கள் பாதிப்புக்குள்ளாகி இருப்பதுடன், ஆற்றில் தண்ணீர் அளவு தொடர்ந்து அதிரித்து வருதால் அச்சமடைந்துள்ளனர். இதனிடையில் ஓமாம்புலியூர் கிராமத்திலுள்ள பழங்குடிஇன மக்கள், குருவாடி, மேலபருத்தி குடி உட்பட 5-க்கும் அதிகமான கிராமங்களில் 60-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் ஆற்றங்கரையோரம் அமைக்கப்பட்டிருந்த செங்கல்சூளை, மிளகாய், பருத்தி உள்ளிட்ட வேளாண் பயிர்களும் வெள்ளத்தில் மூழ்கியது.
இதற்கிடையில் வெள்ளத்தால் பாதிக்கப்படும் மக்களை கண்டறிந்து, அந்தந்த பகுதியிலுள்ள முகாம்களில் தங்கவைக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர். இந்நிலையில் குறுவாடி கிராமத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியை சிதம்பரம் கோட்டாட்சியர் ரவி நேரில் சென்று பார்வையிட்டு, அங்கு உள்ள மக்களுக்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார். கீழ் அணையிலிருந்து வீராணம் ஏரிக்கு வினாடிக்கு 264 கன அடி தண்ணீரானது அனுப்பப்பட்டு வருகிறது. இதன் காரணமாக ஏரி முழுகொள்ளளவான 47.50 அடியை எட்டி விட்டது. அதன்பின் ஏரியிலிருந்து சேத்தியாத் தோப்பு வி. என்.எஸ். மதகு வழியே வினாடிக்கு 100 கனஅடி தண்ணீர் வெள்ளாற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. இது தவிர்த்து வீராணம் ஏரியிலிருந்து சென்னை மக்கள் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 65 கன அடி தண்ணீர் அனுப்பப்படுகிறது.
Post Views:
0