75 ஆவது சுதந்திர தினம்…. 350 அடி நீளம் கொண்ட தேசியக்கொடி….. காண்போரை மெய்சிலிர்க்க வைத்த பேரணி….!!!!


நாடு முழுவதும் வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி 25வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் ஆந்திராவின் காக்கிநாடாவில் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 350 அடி நீளம் உள்ள தேசியக்கொடி பேரணி நடைபெற்றது. நாடு முழுவதும் தேசியக்கொடி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வரும் நிலையில் ஆந்திர மாநிலத்தில் உள்ள காக்கிநாடா பகுதியில் கிட்டத்தட்ட 350 அடி நீளம் கொண்ட தேசியக்கொடி பேரணி நேற்று நடந்தது.

நேற்று நகரின் முக்கிய வீதியில் வழியாக எடுத்துச் செல்லப்பட்ட தேசிய கொடியை சாரணர் இயக்க மாணவர்களுடன் இணைந்து சுமார் 500 மாணவ மாணவிகள் ஏந்தி பிடித்து வந்தே மாதரம் என்று முழக்கமிட்டவாறு சென்றனர். இந்த காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி பலரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.