இன்று ஆசியாவிலேயே மிகப்பெரிய…. “கலைஞர் மாரத்தான்” போட்டி….!!!!


இளைஞர்களிடையே உடற்பயிற்சியின் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக கடந்த 2020 ஆம் வருடம் கலைஞர் கருணாநிதி நினைவு பன்னாட்டு மாரத்தான் என்ற அமைப்பு அரசு சார்பாக தொடங்கப்பட்டது. ஒவ்வொரு வருடமும் மாரத்தான் நடத்த முடிவெடுக்கப்பட்டது. கடந்த 2020 ஆம் வருடம் நடைபெற்ற மாரத்தானில் 28 நாடுகளைச் சேர்ந்த 8,541 கலந்து கொண்டனர். அதேபோன்று 2021 ஆம் வருடம் 37 நாடுகளைச் சேர்ந்த 19 ஆயிரத்து 599 ஒரு பேரும் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு தினத்தை முன்னிட்டு இன்று சென்னையில் நடைபெறவிருக்கும் ‘கலைஞர் மாரத்தான்’ போட்டியில் சுமார் 43,320 பேர் பங்கேற்கின்றனர், அதில் 10,985 பேர் பெண்கள். இதில் முதல் மூன்று இடங்களை பிடிப்பவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் பரிசு வழங்கவுள்ளார். இதன்மூலம் ஆசியாவிலேயே மிகப்பெரிய மாரத்தான் போட்டி என்ற பெருமையை ‘கலைஞர் மாரத்தான்’ பெற்றுள்ளது.

The post இன்று ஆசியாவிலேயே மிகப்பெரிய…. “கலைஞர் மாரத்தான்” போட்டி….!!!! appeared first on Seithi Solai.

Leave a Reply

Your email address will not be published.