நாளை(ஆகஸ்ட் 8) முதல்…. எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகளில் மாற்றம்….. தெற்கு ரயில்வே அறிவிப்பு…..!!!!


பராமரிப்பு பணிகள் காரணமாக எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில், சென்னை சென்டிரல்-மங்களூரு(22637) இடையே மதியம் 1.15 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் வருகின்ற 8-ந்தேதி முதல் செப்டம்பர் 6-ந்தேதி வரை 40 நிமிடம் தாமதமாக மதியம் 1.55 மணிக்கு இயக்கப்படும். சென்டிரல்-மைசூரு(12609) இடையே மதியம் 1.35 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் வருகின்ற 8 ந்தேதி முதல் செப்டம்பர் 6-ந்தேதி வரை 30 நிமிடம் தாமதமாக மதியம் 2.05 மணிக்கு இயக்கப்படும்.

அதனைப்போலவே சென்டிரல்-ஹவுரா (12840) இடையே இரவு 7.15 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் வருகின்ற 20-ந்தேதி 1 மணி நேரம் தாமதமாக 8.15 மணிக்கு இயக்கப்படும். நாகர்கோவில்-கச்சேகுடா(16354) இடையே காலை 9 மணிக்கு புறப்படும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் வருகின்ற 13-ந்தேதி, 20-ந்தேதி, 27 ந்தேதி மற்றும் செப்டம்பர் 3-ந்தேதிகளில் 3 மணி நேரம் தாமதமாக 12 மணிக்கு இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளதது.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.