மீனம் ராசிக்கு…! நன்மை உண்டாகும்..! பாராட்டுகள் கிடைக்கும்..!!


மீனம் ராசி அன்பர்களே..!
இன்று புனித பயணிகள் மற்றும் தெய்வீக காரியங்களில் மனம் ஈடேறும்.

சுகம் மற்றும் சந்தோசங்கள் இன்று கைகூடும். மனைவியின் உதவி கிடைக்கும். வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்மை கொடுக்கும். செயல்திறன் மூலம் பாராட்டுகள் கிடைக்கும். வாழ்க்கையில் திடீர் திருப்பங்கள் ஏற்படும். தெய்வீக நம்பிக்கை கூடுவதால் அனைத்து விஷயங்களிலும் நம்பிக்கை இருக்கும். ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். கொடுக்கல் வாங்கல்கள் ஓரளவு சீராக இருக்கும். பெரிய தொகையை பயன்படுத்த வேண்டாம்.

அரசியல் துறையில் உள்ளவர்களுக்கும் இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். மக்கள் தொடர்பு விரிவடைந்து முன்னேற்றம் உண்டாகும். உங்களைப் பார்த்து மற்றவர்கள் பொறாமைப் படக்கூடும். மனக் குழப்பத்தை தவிர்க்க வேண்டும். அரசு வகையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணியவேண்டும். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே இன்று சூரிய பகவான் வழிபாட்டையும் ஆஞ்சநேயர் வழிபாட்டையும் மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள், இன்று நான் சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தென்கிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 5 மற்றும் 9.
அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்.

The post மீனம் ராசிக்கு…! நன்மை உண்டாகும்..! பாராட்டுகள் கிடைக்கும்..!! appeared first on Seithi Solai.

Leave a Reply

Your email address will not be published.