கிணற்றுக்குள் பெயர்ந்து விழுந்த வீடு…. தண்ணீரில் தத்தளித்த விவசாயி…. தர்மபுரியில் பரபரப்பு….!!!


கனமழையின் காரணமாக திடீரென மண்சரிவு ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் கடந்த 10 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இங்குள்ள மகேந்திரமங்கலம் பகுதியில் நேற்று முன்தினம் கனமழை பெய்துள்ளது. இந்த பகுதியில் விவசாயியான கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய விவசாயக் கிணற்றின் அருகே ஒரு சிறிய வீடு கட்டி தனியாக வசித்து வருகிறார். இந்த பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக திடீரென மண்சரிவு ஏற்பட்டது.

இதனால் வீடு எதிர்பாராத விதமாக பெயர்ந்து கிணற்றுக்குள் பெயர்ந்து விழுந்தது. அதோடு வீட்டிற்குள் படுத்து கிடந்த கிருஷ்ணமூர்த்தியும் கிணற்றுக்குள் விழுந்துவிட்டார். இவருடைய அலரல் சத்தத்தை கேட்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக கிருஷ்ணமூர்த்தியை பத்திரமாக மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.