“உங்க பொண்ணுக்கு தோஷம் இருக்கு”…. பூசாரிக்கு அடி உதை…. மருத்துவமனையில் இருந்து தப்பி ஓட்டம்…!!!!!!!


சென்னை மதுரவாயல் அடுத்த  கந்தசாமி நகர் 5 வது தெருவை சேர்ந்த சந்திரசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள அம்மன் கோவில் பூசாரி ஆக இருக்கின்றார். அந்த கோவிலுக்கு ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 14 வயது மகளுடன் பெண் ஒருவர் சாமி கும்பிடச் சென்றுள்ளார். பூசாரி சந்திரசேகர் அந்த மாணவிக்கு சுற்றி போட்டார் அதன் பின் உங்கள் மகளுக்கு தோஷம் இருக்கிறது. அதனை கழிப்பதற்கு சில பரிகார பூஜைகள் செய்ய வேண்டும் இதற்காக எனது வீட்டில் சில நாட்கள் தங்கி இருக்க வேண்டும் அவ்வாறு செய்தால் தோஷம் நிவர்த்தியாகும் என அந்த பெண்ணிடம் தெரிவித்துள்ளார்.

அதை நம்பிய அந்த மாணவியின் பெற்றோர் பூசாரி கூறிய படி மகளுடன் அவரது வீட்டிற்கு சென்று தங்கி உள்ளார். பூசாரி சந்திரசேகர் பரிகார பூஜைகள் செய்வதாக கூறி மாணவியை தனியாக அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகின்றது. மேலும் இதனை பெற்றோரிடம் சொல்ல கூடாது என மிரட்டியுள்ளார். ஆனால் அந்த மாணவி பூசாரி தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த மாணவியின் பெற்றோர் பூசாரியை சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். இதில் காயம் அடைந்த சந்திரசேகர் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் இதனை அறிந்த பூசாரி மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடி விட்டதாக தெரிகின்றது தலைமறைவான  பூசாரியை போலீசார் தேடி வருகின்றனர்.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.