தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி, திருப்பூர் ஆகிய 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னையில் இரண்டு நாட்களுக்கு மிதமான மழை தொடர வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் நாளை முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 32 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல நேற்று மேல் பவானியில் 20 சென்டிமீட்டர் மழையும், பந்தலூர் தாலுகாவில் 14 சென்டிமீட்டர் மழையும் பதிவானது.
The post இன்று இந்த 6 மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் கனமழை…. வானிலை ஆய்வு மையம் தகவல்! appeared first on Seithi Solai.