“பிரமோஷனுக்கு மட்டும் வரவே மாட்டார்”….. பிரபல நடிகையை கண்டித்த ஹீரோ சித்தார்த்…!!!!


தெலுங்கு சினிமாவில் இளம் நடிகராக வலம் வருபவர் சித்தார்த் நிகில். இவர் கார்த்திகேயா 2 படம் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக அனுபவமா பரமேஸ்வரன் நடித்திருக்கிறார். இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிக்கொண்டே இருந்தது. இந்நிலையில் இரண்டு வாரங்களில் படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. சமீபத்தில் இப்படத்தின் படத்தின் விளம்பர நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அனுபவமா கலந்து கொள்ளவில்லை. இதற்கு கதாநாயகன் சித்தார்த், படப்பிடிப்புக்கு எல்லாம் சரியாக வந்துவிடுவார். அதிகாலையிலே படப்பிடிப்பை வைத்தாலும் சரியான நேரத்திற்கு வருவார. ஆனால் விளம்பர நிகழ்ச்சிக்கு வரச் சொன்னால் மட்டும் வரமாட்டார் என்று அனுபமாவை காட்டமாக பேசினார்.

இதனையடுத்து பட விழாவுக்கு வராதது குறித்து இன்ஸ்டாகிராமில் அனுபவமா விளக்கம் அளித்தார். அதில் அவர் கூறியது, “கார்த்திகேயா ப்ரமோஷனுக்கு நான் ஏன் வரவில்லை என்று விளக்கம் அளிக்க விரும்பினேன். நான் 2 படங்களுக்கும் இரவும் பகலும் ஷூட்டிங்கில் இருக்கிறேன். கார்த்திகேயா ரிலீஸ் தேதியில் பல மாற்றங்கள் ஏற்பட்டது. அதனால்தான் வரமுடியவில்லை. என் கஷ்டத்தை புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். அனுபாமாவின் விளக்கத்திற்கு ரசிகர்கள், ‘அவர் கார்த்திகேயா விளம்பரம் நிகழ்ச்சிக்கு வராததில் தவறு இல்லை’ என்று கருத்து பதிவிட்டு வருகிறார்கள்.

The post “பிரமோஷனுக்கு மட்டும் வரவே மாட்டார்”….. பிரபல நடிகையை கண்டித்த ஹீரோ சித்தார்த்…!!!! appeared first on Seithi Solai.

Leave a Reply

Your email address will not be published.