பகீர்…..பிரபல நாட்டில் குண்டு வெடிப்பு 8 பேர் பலி…. பயங்கர சம்பவம்….!!!!


ஆப்கானிஸ்தான் நாட்டில் தாலிபான்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த நாட்டில் அவ்வப்போது குண்டு வெடிப்பு, தற்கொலைப்படை, பயங்கரவாத தாக்குதல்களும் அரங்கேறி வருகிறது. இந்நிலையில் அந்நாட்டின் தலைநகர் காபுல் நகரில் ஷியா பிரிவு இஸ்லாமிய மதத்தினர் வழிபாடு நடத்தும் மத வழிபாட்டு தளம் அருகில் நேற்று பயங்கர குண்டு வெடிப்பு நடைபெற்றது.

இந்த சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்தனர். மேலும் 18 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த குண்டு வெடிப்பு தாக்குதல் சம்பவத்திற்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. ஆனால் ஐஏஎஸ் பயங்கரவாத அமைப்பு இந்த தாக்குதல் நடத்தி இருக்கலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.