பெண்ணை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கோவிலூர் கிராமத்தில் அஞ்சலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜசேகர் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் ராஜசேகரும் கீழகொத்தகோட்டை பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவரும் நண்பர்களாக பழகி வந்தனர். நேற்று முன்தினம் முருகேசனுடன் சேர வேண்டாம் என அஞ்சலை தனது மகனை கண்டித்துள்ளார்.
இதனை அறிந்த முருகேசன் தனது நண்பர்களான விஜய், வீரமுத்து ஆகியோருடன் இணைந்து அஞ்சலையை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளார். இதனால் காயமடைந்த அஞ்சலி தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் முருகேசனை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக இருக்கும் விஜய், வீரமுத்து ஆகியோரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
Post Views:
0