“ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவிலில் ஆடி சுவாதி விழா”…. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்….!!!!!!


ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவிலில் ஆடி சுவாதி திருவிழாவையொட்டி கருட பகவான் திருமஞ்சன அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் புரிந்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சாமி கோவில் மதில் வெளிசுவர்களில் மேல் பட்சிராஜரான் கருடபகவான் நான்கு மூலைகளில் அமைக்கப்பட்டிருக்கின்றது. நேற்று இங்கு ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் ஆடி சுவாதி விழா கொண்டாடப்பட்டது.

இவ்விழாவையொட்டி காலை 07.00 மணிக்கு விஸ்வரூபம், 08.30 மணிக்கு கருடனுக்கு திருமஞ்சனம், அலங்காரம், நித்தியல் கோஷ்டியும் நடந்தது. காலை 10:30 மணிக்கு கருடனுக்கு நல்லெண்ணெய், மஞ்சள், பால், திரவியம், தேன், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிடவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து புதிய வஸ்திரங்கள் பட்சிராஜரான் கருட பகவானுக்கு சாற்றப்பட்டது. பின் பக்தர்கள் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடனை செலுத்தினார்கள். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள்.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.