நாடு முழுவதும் வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் சுயவிவர படத்தை மாற்றியுள்ளார்.இந்திய மூவர்ண கொடியை வைத்துள்ள ஸ்டாலின் பின்னணியில் கருணாநிதியின் புகைப்படத்தை வைத்து, மறைந்த தனது தந்தை முதல்வர்களுக்கான கொடியேற்ற உரிமையை உறுதி செய்துள்ளார்.பிரதமர் நரேந்திர மோடி தனது சமூக ஊடக கணக்குகளின் சுயவிவர படமாக மூவர்ண கொடியை வைத்த சில நாட்களுக்குப் பிறகு முதல்வர் ஸ்டாலின் தனது படத்தை தற்போது மாற்றி உள்ளார்.
Post Views:
0