தோட்டக்கலை திட்டத்திற்கு பதிவு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது தமிழக அரசு.
தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்திற்கு ரூபாய் 27.50 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது தமிழக அரசு. மேலும் விதைகள் நடவுக்கன்றுகளை மானிய விலையில் விநியோகிக்க ரூபாய் 8.44 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கத்தரி, மிளகாய், தக்காளி, மஞ்சள், கொத்தமல்லி உள்ளிட்ட பயிர்களுக்கான விதைகள் நடவுக்கன்றுகளை 40% மானியத்தில் வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. tnhorticulture.tn.gov.in என்ற இணையத்தளத்தில் பதிவுசெய்து பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Post Views:
0