6 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் ஐஏஎஸ் அதிகாரிகள் ஆறு பேரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மு.க ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளை அடிக்கடி பணியிட மாற்றம் செய்து வருகின்றது. அந்த வகையில் தற்போது ஆறு ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்துள்ளது. அதன்படி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் செயலாளராக ஜவகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சிக் கழக (சிட்கோ) மேலான் இயக்குனராக மதுமதி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பொதுப்பணித்துறை முதன்மை செயலாளராக மணிவாசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை செயலாளராக மங்கத் ராம் ஷர்மா நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆதி திராவிடர் நலத்துறை இயக்குனராக ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளார். கால்நடைத்துறை முதன்மை செயலாளராக கார்த்திக் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்..


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.