தாய்லாந்து நாட்டின் ஒரு மதுபான விடுதியில் திடீரென்று தீப்பற்றி எரிந்து பயங்கர விபத்து ஏற்பட்டதில் 13 நபர்கள் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
தாய்லாந்து நாட்டின் சோன்புரி மாகாணத்தில் இருக்கும் மவுண்டன் பி பப் என்னும் இரவு நேரத்தில் இயங்கக்கூடிய மதுபான விடுதியில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. இதில், 13 நபர்கள் தீயில் கருகி பரிதாபமாக பலியாகிநற். மேலும் 40க்கும் அதிகமானோர் காயமடைந்திருக்கிறார்கள்.
தீ பற்றி எரிந்தவுடன் அங்கிருந்த மக்கள் அலறியடித்துக் கொண்டு தீக்காயங்களுடன் தப்பி ஓடி இருக்கிறார்கள். தகவல் அறிந்த தீயணைப்பு படையினர், சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள். தீ விபத்து எதனால் ஏற்பட்டது? என்பதற்கான காரணம் வெளியாகவில்லை. இது தொடர்பான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
Post Views:
0