சிம்புவின் அடுத்த திரைப்படம்…. “உலகநாயகனுடன் கூட்டணி”…!!!!!


கமல் தயாரிப்பில் நடிகர் சிம்பு நடிக்க இருப்பது உறுதியாகி இருக்கின்றது.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இடையில் படவாய்ப்புகள் இல்லாமல் பல சறுக்கல்களை சந்தித்த இவர் மாநாடு திரைப்படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். அதன் பின் இவருக்கு டாக்டர் பட்டம், பல பட வாய்ப்புகள், விளம்பரங்கள், பிக்பாஸ் நிகழ்ச்சி என அடுத்தடுத்து அசத்தி பிஸியாக இருக்கின்றார் சிம்பு.

இவர் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இத்திரைப்படம் வருகின்ற செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி வெளியாக உள்ளது. தற்போது பத்து தல திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இதையடுத்து கொரோனா குமார் திரைப்படத்தில் கோகுல் இயக்கத்தில் நடிக்க இருக்கின்றார். இந்த நிலையில் சிம்பு உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் புதிய திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக சில மாதங்களுக்கு முன்பு செய்தி வெளியானது. இது தற்போது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கின்றதாம். மேலும் இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க உள்ளதாகவும் விரைவில் இது பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

The post சிம்புவின் அடுத்த திரைப்படம்…. “உலகநாயகனுடன் கூட்டணி”…!!!!! appeared first on Seithi Solai.

Leave a Reply

Your email address will not be published.