குடும்பத தகராறில் அண்ணனை கத்தியால் குத்திய தம்பியை போலீசார் கைது செய்தனர்.
சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் தொட்டில் பட்டி பகுதியில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காளியப்பன்(29), மாதேஷ்(28) என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இதில் காளியப்பன் தனியார் கல்லூரியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். மாதேஷ் கட்டிட தொழிலாளியாக இருக்கிறார். இந்நிலையில் மாதேஷ் தனது அண்ணனிடம், தாயாரின் கம்மலை கொடுக்குமாறு தகராறு செய்துள்ளார்.
இதுதொடர்பாக அண்ணன் தம்பிக்கிடையே கைகலப்பு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த மாதேஷ் காளியப்பனை கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். இதனால் காயமடைந்த காளியப்பனை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மாதேஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Post Views:
0