அடக்கடவுளே… 13 வயது மாணவிக்கு அடி, உதை…. இன்ஸ்டாகிராமில் வெளியான வீடியோ…. அதிர்ச்சி சம்பவம்….!!!!!!!


டெல்லியில்  13 வயது மாணவியை சக மாணவிகள் அடித்து, உதைத்த  வீடியோ இன்ஸ்டாகிராமில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நாட்டின் தலைநகர் டெல்லியில் 13 வயது மாணவி ஒருவரை அதே பள்ளியில் படித்து வரும் மூத்த மாணவிகள் 5 பேர் அடித்து உதைத்து அதனை படம் பிடித்து வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்ட பின்னரே  போலீசுக்கு தகவல் தெரிய வந்திருக்கிறது. இது பற்றி டெல்லி துணை காவல் ஆணையர் சாகர் சிங் கால்சி பேசும்போது, மால்கா கஞ்ச்   பகுதியை சேர்ந்த அலாமுதீன் இவரது 13 வயது மகள் பள்ளிக்கூடத்தில் படித்து வருகின்றார். அதே பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வரும் சக மாணவிகள் சிலர் அந்த மாணவியை அடித்து தாக்கி இருக்கின்றனர். இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் அலாமுதீன் தகவல் தெரிவிக்காமல் இந்து ராவ்  மருத்துவமனைக்கு  சிகிச்சைக்காக தனது மகளை கொண்டு சென்றிருக்கின்றார்.

இந்த தாக்குதல் வீடியோவானது instagram-ல் பகிரப்பட்டிருக்கிறது. இதனை தொடர்ந்த மாணவியின் உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கின்றனர் என காவல் ஆணையர் தெரிவித்துள்ளார். மேலும் அந்த சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு இருக்கிறது. இந்த சம்பவம் பற்றி சிறுமியும் எழுத்து பூர்வ  புகார் அளித்துள்ளார். தாக்குதல் நடத்திய ஐந்து மாணவிகளையும் அடையாளம் காட்ட முடியும் என உறுதியளித்திருக்கின்றார். இதனை தொடர்ந்து சிறுவர் நீதி சட்டத்தின் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு நடைபெற்று வருகிறது எனினும் சிறுமையை சக பள்ளி மாணவிகள் சேர்ந்து தாக்கியதற்கான காரணம் எதையும் போலீசார் வெளியிடவில்லை.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.