ஒரு நிறுவனத்தில் நீங்கள் வேலை பார்த்துவிட்டு அந்த நிறுவனத்தில் இருந்து வெளியேறி வேறு நிறுவனத்தில் வேலை பார்க்கும் நபர் என்றால் இந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். வேலை நிறுத்தம் அல்லது வேலை கிடைக்க தாமதமானால் உங்களுடைய pf பணம் உங்களுக்கு கை கொடுக்கும். உங்களின் வேலைக்கு சேர்ந்த தேதி, மாதம், வருடம் மற்றும் வேலையில் இருந்து விலகிய தேதி, மாதம், வருடத்தை அப்டேட் செய்வது மிகவும் அவசியம்.
இபிஎஃப் இல் நீங்கள் வெளியேறும் தேதியை உங்கள் மேலாளர் அப்டேட் செய்ய வேண்டும். அப்படி அவர் புதுப்பிக்கவில்லை என்றால் நீங்கள் இப்போது கவலைப்பட தேவையில்லை. இபிஎஃப் உறுப்பினர்கள் தங்கள் சொந்த வெளியேறும் தேதியை மேலாளர் உதவியின்றி புதுப்பிக்க முடியும். அது எப்படி என்பதை பற்றி இதில் காணலாம். முதலில் யூஏஎன் போர்ட்டலில் உங்களது யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்ட் மற்றும் கேப்ஸாவை சரியாக உள்ளிட்டு லாகின் செய்ய வேண்டும். பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள புகைப்படத்தில் உங்களது போல உங்கள் திரையில் தோன்றும்.
பிறகு மேனேஜ் என்று ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். அதற்கு கீழ் காட்டும் ஆஃப்சன்களில் Mark Exit ஆஃப்சனை தேர்வு கிளிக் செய்யவும். அதையடுத்து ஒரு திரை தோன்றும். அதில் பிஎப் மெம்பர் ஐடியை தேர்வு செய்ய வேண்டும். அதன் பின் பெயர், நீங்கள் நிறுவனத்தில் இருந்து வெளியேறிய தேதி மற்றும் மாதம் ஆகியவற்றை உள்ளிட்டு வெளியேறியதற்கான காரணத்தையும் பதிவு செய்யவும். இப்போது பிஎப் கணக்குடன் இணைத்து இருக்கும் மொபைல் எண்ணுக்கு வரும் ஓடிபி-யை உள்ளிடவும். அதையடுத்து உங்களின் வெளியேறிய தேதி உடனடியாக அப்டேட் ஆகிவிடும்.
Post Views:
0