“கனமழையால் சாலையில் விழுந்த மின்கம்பம்”…. பெரும் பரபரப்பு…!!!!!!!


வேப்பன பள்ளியில் பெய்த மழையின் காரணமாக சாலையில் இருந்த மின்கம்பம் சரிந்து விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வேப்பன பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக கன மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பெய்த கன மழை காரணமாக கிருஷ்ணகிரி வேப்பனப்பள்ளி பிரதான சாலையில் குட்டப்பள்ளி கிராமம் அருகே சாலையோரம் மரம் ஒன்று சாய்ந்து அருகே உள்ள மின்கம்பத்தின் மீது விழுந்துள்ளது. இதனால் சாலையில் இருந்த மின்கம்பம் சரிந்து  கீழே விழுந்தது. இந்த நிலையில் டீ கடையின்  அருகில் இருந்த பொதுமக்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பியுள்ளனர். மேலும் தகவல் அறிந்து வந்த மின்வாரிய ஊழியர்கள் மின்சாரத்தை துண்டித்து சாலையில் விழுந்த மரத்தை அகற்றி மின் கம்பிகளை அகற்றியுள்ளனர். இதனால் சுற்றுவட்டார கிராமங்களுக்கு சில மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.