கோல்டன் விருது பெற்ற சீனுராமசாமி இயக்கிய படம்…. குஷியில் துள்ளிக்குதிக்கும் படக்குழு….!!!!


இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி, குரு சோமசுந்தரம் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் அண்மையில் திரையரங்குகளில் வெளியான படம் “மாமனிதன்” ஆகும். இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர்ராஜா முதல் முறையாக கூட்டணி அமைத்து இசை அமைத்திருக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா தன் ஒய்.எஸ்.ஆர் நிறுவனம் வாயிலாக இப்படத்தை தயாரித்திருக்கிறார்.

இந்த படம் விமர்சனமற்றும் வசூல் ரீதியாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இத்திரைப்படத்தை பார்த்த திரைப்பிரபலங்கள் பல பேர் இயக்குனர் சீனு ராமசாமியை பாராட்டினர். இந்த நிலையில் இப்படம் டோக்கியோவில் நடந்த திரைப்படவிழாவில் சிறந்த ஆசிய படம் எனும் கோல்டன் விருதினை பெற்றுள்ளது. இதை இயக்குனர் சீனு ராமசாமி தன் சமூகவலைதளப்பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.