வெள்ளப்பெருக்கின் காரணமாக வீடுகளை தண்ணீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
கர்நாடக மாநிலத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணைக்கு வினாடிக்கு ஒரு லட்சத்து 40 ஆயிரத்திற்கும் அதிகமான கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டதால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் 270 வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை அதிகாரிகள் மீட்டு அரசு பள்ளிக்கூடங்கள் மற்றும் தனியார் திருமண மண்டபங்களில் தங்க வைத்துள்ளனர்.
இதனையடுத்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தாசில்தார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மேலும் சில வீடுகளையும் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பதற்கான நடவடிக்கைகளில் அதிகாரிகள் ஈடுபட்டதோடு, தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களையும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
Post Views:
0