கார் ஓட்டுநர்களுக்கு இனி இது கட்டாயம்?…. மந்திரி நிதின் கட்காரி வெளியிட்ட தகவல்….!!!!


இந்தியாவில் தயாரிக்கப்படும் புது மாடல் கார்கள் அனைத்திலும் இனி கட்டாயம் டூயல் ஏர்பேக் பொருத்த வேண்டும் என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை உத்தரவிட்டு செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, “ஏப்ரல் 1, 2021 முதல் அறிமுகம் செய்யப்பட்ட புது மாடல் கார்கள் அனைத்திலும் டூயல்ஏர்பேக் அதாவது காரை இயக்குபவருக்கும், முன் இருக்கையில் அமர்ந்திருக்கும் மற்றொரு நபருக்கும் கட்டாயம் ஏர்பேக் பாதுகாப்பை அளிக்கவேண்டும் என்று அறிவித்துள்ளது.

இந்த நிலையில் இதுகுறித்து நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மக்களவையில் இன்று பேசிய மத்திய சாலை போக்குவரத்து துறை மற்றும் நெடுஞ்சாலைதுறை மந்திரி நிதின் கட்காரி கூறியதாவது, நாட்டில் தற்போதுள்ள சட்டங்கள்படி, அனைத்து கார்களிலும் முன் பக்கத்திலிருந்து பயணிக்கும் ஓட்டுநர் மற்றும் பயணிகளுக்கு ஏர்பேக் எனப்படும் பாதுகாப்பு அம்சம் கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது. அதேசமயத்தில் பின்புற இருக்கைகளில் அமர்ந்து பயணிக்கும் பயணிகளுக்கு, இத்தகைய பாதுகாப்பு அம்சங்கள் இருக்கவேண்டும் என்று கட்டாயமில்லை. அத்துடன்  சட்டம் இயற்றப்படவில்லை. அது தொடர்பாக அரசு ஆலோசித்து வருகிறது. ஆகவே விரைவில் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இதன் வாயிலாக பின்பக்க இருக்கையில் அமர்ந்து பயணிப்போரின் உயிருக்கு ஆபத்து ஏற்படாத வகையில், விபத்து ஏற்படும் தருணத்தில் பாதுகாக்கப்படும் என அவர் தெரிவித்தார்.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.