தமிழக முழுவதும் பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சமச்சீர் பாடத்திட்டம் அமலில் உள்ளது. இதன் அடிப்படையில் மாணவர்களுக்கு மூன்று பருவ தேர்வுகள் வருடம் தோறும் நடத்தப்படும். அதில் நடப்பு கல்வி ஆண்டில் முதல் பருவ தேர்வு,பத்தாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு செப்டம்பர் 23ஆம் தேதி தொடங்க உள்ளது.
அதற்கு முன்பு மாணவர்களை தயார்படுத்தும் விதமாக அழகு தேர்வு என்ற பெயரில் முன் பருவ தேர்வு நடத்த வேண்டும். இந்த தேர்வுகளை இந்த மாதம் இரண்டாம் வாரத்திற்குள் மாவட்ட அளவில் பொது தேர்வு போல நடத்தி முடிக்க வேண்டும் என அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 6-12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளி கல்வித்துறை சார்பாக வினாத்தாள் தயாரிக்கப்பட்டு மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்று அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
Post Views:
0