தமிழகத்தில் இன்று(ஆக.,4) மின்தடை….. எந்தெந்த பகுதிகளில் தெரியுமா….? இதோ தெரிஞ்சிக்கோங்க….!!!!


தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (04-08-2022) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

தேனி
காலை 10 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை வீரபாண்டி, போடேந்திரபுரம், காமராஜபுரம், மாணிக்காபுரம், உப்புக்கோட்டை, டொம்புச்சேரி, பத்திரகாளிபுரம், உப்பாா்பட்டி, சடையால்பட்டி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

திருச்சி
துறையூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட துறையூர் மதுராபுரி, குடில் ரோடு, திருச்சி ரோடு, ஆத்தூர் ரோடு, பாலக்கரை, கீரம்பூர், சொரத்தூர், சத்திய நாராயண சிட்டி, வெங்கடேசபுரம், சித்திரப்பட்டி, கொல்லப்பட்டி, கலிங்கமுடையாண்பட்டி, சங்கம்பட்டி, காமாட்சிபுரம், சேனப்பநல்லூர், நாமநாயக்கண்பட்டி, வி.ஏ. சமுத்திரம், எரகுடி, வடக்குபட்டி, வீரமச்சான்பட்டி ஆகிய பகுதிகளுக்கு காலை 8.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

கிருஷ்ணகிரி
ஊத்தங்கரை துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பேருந்து நிலையம், அம்பேத்கர் நகர் சேலம் ரோடு, பெரியார் நகர், காமராஜ் நகர், கலைஞர் நகர், ரெட்டியார் தோட்டம், பாபா நகர், வித்யா நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 10. 00 மணி முதல் மாலை 1. 00 மணிவரை, மின் விநியோகம் இருக்காது

சிவகங்கை
காளையார்கோவில் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட காளையார்கோவில், சொர்ணவள்ளி நகர், பள்ளித்தம்மம், புலியடிதம்மம், சருகனி, பொன்னலிக்கோட்டை, கொல்லங்குடி, கல்லத்தி, கருங்காளி, பெரியகண்ணனூர், ஒய்யவந்தான், நாட்டரசன்கோட்டை ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
மதகுபட்டி துணை மின் நிலையத்திற்குட்பட்ட மதகுபட்டி, ஒக்கூா், கீழமங்களம், காடனேரி, அம்மன்பட்டி, நகரம்பட்டி, காளையாா்மங்களம், கருங்காப்பட்டி, தச்சம்பட்டி, கருங்காலக்குடி, அண்ணாநகா், பா்மா காலனி, நாலுகோட்டை, ராமலிங்கபுரம், வீழநேரி, நாமனூா், அலவாக்கோட்டை, சிங்கினிப்பட்டி, அம்மச்சிப்பட்டி, பிரவலூா், பேரணிப்பட்டி ஆகிய கிராமங்களிலும், அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

திருப்பத்தூர் துணை மின் நிலையத்திற்குட்பட்ட திருப்பத்தூர், பிள்ளையார்பட்டி, கருப்பூர், தென்கரை, திருக்கோஷ்டியூர், மல்லாக்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

தூத்துக்குடி
விளாத்திகுளம் உப மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளான மந்திக்குளம், செங்கல்பட்டை, கமலாபுரம், பிள்ளையார்நத்தம், பேரிலோவன்பட்டி, விளாத்திகுளம், அயன் பொம்மையாபுரம், ராமச்சந்திராபுரம் அதனை சுற்றியுள்ள ஊர்கள் மற்றும் குளத்தூர் உப மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளான கீழ வைப்பார், வைப்பார், வேப்பலோடை, குளத்தூர், மார்த்தாண்டம்பட்டி, முள்ளூர், அதனை சுற்றியுள்ள ஊர்கள் அதேபோல் சூரங்குடி உபமின் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளான மேல்மாந்தை, இ. வேலாயுதபுரம், வேம்பார், பச்சையாபுரம், அரியநாயகிபுரம் அதனை சுற்றியுள்ள ஊர்களில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும்.

புதுச்சேரி
கடற்கரை சாலை முதல் எல்லைப்பிள்ளைச் சாவடி வரை, அரியாங்குப்பம் முதல் முத்தியால்பேட்டை வரையிலான பகுதிகளிலும் வில்லியனுார் உயர் மின்னழுத்த பாதைகுட்பட்ட உப்பளம் நீர் தேக்கத் தொட்டி, இந்திராகாந்தி விளையாட்டு மைதானம், கோலாஸ் நகர், சூளைமேடு பகுதிகளிலும் காலை 10.00 மணி முதல் மதியம் 2.00 வரை மின் தடை ஏற்படும்.

மதுரை
நாட்டாமங்கலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை கிழக்குத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும். ஒத்தக்கடை அருகே உள்ள இடையபட்டி, மீனாட்சிபுரம் அதனை சுற்றியுள்ள பல பகுதிகளுக்கு மின்சாரம் தடை செய்யப்படும்.

திருப்பூர்
உடுமலை துணை மின் நிலையத்திற்கு உள்பட்டபுஷ்பகிரி வேலன் நகா், சங்கா் நகா், காந்தி நகா்-2, போடிபட்டி, அண்ணா நகா், காமராஜ் நகா், பள்ளபாளையம், கொங்கலக்குறிச்சி, சுண்டாக்காம்பாளையம், இராகல்பாவி, குறிச்சிக் கோட்டை, புக்குளம்.பகுதியில் காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும். பூமலூா் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட மங்கலம், பூமலூா், மலைக்கோவில், அக்ரஹாரபுதூா், பள்ளிப்பாளையம், இடுவாய், பாரதிபுரம், சீராணம்பாளையம், கிடாத்துறைப்புதூா், வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 முதல் மாலை 4 மணி வரை மின் தடை ஏற்படுகிறது.

The post தமிழகத்தில் இன்று(ஆக.,4) மின்தடை….. எந்தெந்த பகுதிகளில் தெரியுமா….? இதோ தெரிஞ்சிக்கோங்க….!!!! appeared first on Seithi Solai.

Leave a Reply

Your email address will not be published.