மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் 4 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள முக்கண்ணாமலைப்பட்டி ஏ.டி காலணியில் முத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மணிகண்டன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் மணிகண்டன் அதே பகுதியில் வசிக்கும் பழனிச்சாமி என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்று விட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் இலுப்பூர் சித்திரைகுளம் பாலம் அருகே சென்றபோது மணிகண்டனின் மோட்டார் சைக்கிள் மீது ரஞ்சித், பெரியசாமி ஆகியோர் வந்த மோட்டார் சைக்கிள் மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த மணிகண்டன், பழனிச்சாமி, ரஞ்சித், பெரியசாமி ஆகிய 4 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு இலுப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Post Views:
0