எலெக்ஷன்ல ஜெயிச்சா விட்டுருங்க…! தோற்றவுங்கள போய் பாருங்க… மோடியின் வித்தியாசமான பார்வை …!!


பாரத பிரதமர் மோடி குறித்தான புத்தகம் வெளியீட்டு விழாவில் பேசிய தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, நம்முடைய அமித்ஷா ஐயா அவர்கள் நம்முடைய மோடிஜியை பற்றி எழுதியிருக்கிறார்கள். ஏனென்றால் மோடிஜியினுடைய ஆரம்ப கால பயணத்திலிருந்து நம்முடைய உள்துறை அமைச்சர் அவர்கள் இருக்கிறார்கள். முதன் முதலாக அவர் சொல்கிறார்…

நம் குஜராத்தில் லோக்கல் பாடி எலக்சன் நடந்து முடிந்த பிறகு மோடிஜி ஒரு மீட்டிங்கில் சொல்கிறார்…. இந்த இந்தியன் எலக்சன் என்றாலே நாம் ஜனநாயகத்தில் ஜெயிப்பவர்களை தான் அதிகமாக போய் தேடுவோம். ஜெயித்தவர்களை போய் பாராட்டுவோம். ஆனால் நம்முடைய கட்சி வளர்கிறது. நீங்கள் தோற்றவர்களை கண்டுபிடிங்கள் என்று, அமித்ஷாஜி முதன்முதலாக நான் வாழ்க்கையில் அதை பார்த்தேன், தோற்றவர்களை ஒரு எலக்ஷனில் இரண்டாவது வந்தவர்கள்,

மூன்றாவது வந்தவர்கள், நான்காவது வந்தவர்களை பாருங்கள். அவர்களிடம் பேசுங்கள் அவர்களை  பாரதிய ஜனதா கட்சிக்கு கொண்டு வாருங்கள். அவர்கள் மூலமாக இந்த கட்சியை வலிமை படுத்துங்கள்  என்கிறார். ஒரு வித்தியாசமான கோணல், எதை பார்த்தாலும் கூட…. ஒரு வித்தியாசமான கோணத்தில் பார்க்கக் கூடிய ஒரு மனிதர், நம்முடைய சகோதரர் சூர்யா அவர்கள் சொன்னது போல என கூறி பிரதமரை பாராட்டினார்.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.