கனமழை பெய்ததால் வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்கிறது. நேற்று முன்தினம் கோத்தகிரி அருகே இருக்கும் குண்டூர் காலனி கிராமத்தில் கனமழை பெய்தது. இதனால் கமலேஷ்வரி என்பவரது வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இதுகுறித்து அறிந்த கிராம நிர்வாக அலுவலர் மீனாட்சி சுந்தரம், கிராம உதவியாளர்கள் அறிவாகரன், மூர்த்தி ஆகியோர் உடனடியாக சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்றனர். இதனை அடுத்து பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு ரூ.4,100 நிவாரண தொகையை அதிகாரிகள் வழங்கியுள்ளனர்.
The post வெளுத்து வாங்கிய மழை…. இடிந்து விழுந்து சேதமான வீடு…. அதிகாரிகளின் நடவடிக்கை…!! appeared first on Seithi Solai.