பாரத பிரதமர் மோடி குறித்தான புத்தகம் வெளியீட்டு விழாவில் பேசிய தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, டாக்டர் தேவி செட்டி அவர்கள் மிகப்பெரிய மருத்துவர், நாராயணா ஆரோக்கியா மருத்துவமனை நடத்துகிறவர்கள் அவர் எழுதியிருப்பார். இந்த புத்தகம் என்பது அனைவரும் படிக்க வேண்டிய ஒரு புத்தகம். காரணம்… இதை படித்து முடிக்கும்போது மோடிஜியை பற்றி தெரியாத விஷயங்கள் இல்லை என்று நாம் நினைக்கிறோம்.
ஏனென்றால் உலக அளவில் பேசக்கூடிய தலைவர், இன்றைக்கு ட்விட்டரில் எடுத்து பார்த்தீர்கள் என்றால் 80 மில்லியன் பாலோவர்ஸ் மோடி ஐயாவிற்கு, facebook, அவர் இல்லாத இடமே கிடையாது. இல்லாத பிரசன்ஸ் கிடையாது. எல்லா இடங்களிலுமே மோடிஜியை பார்க்கிறோம். ஆனால் இந்த புத்தகத்தை ஒவ்வொரு சாப்டரை படித்து முடிக்கும் போது, ஒரு புதிய மோடியை பார்த்தது போல் நமக்கு தோன்றும்,
இதை நாம் பார்க்காத மோடிஜியை அவர்கள் அறிமுகப்படுத்துகிறார்கள் நமக்கு தெரியலையே அது. பிவி சிந்து அவர்கள் சொல்கின்ற மோடி நமக்கு புதிதாக இருக்கிறது. அதனால் அனைவருமே அதை படிக்க வேண்டும். குறிப்பாக மோடிஜியை பின்பற்றுகின்றவர்கள்….
கட்சியில் இருப்பவர்கள் எல்லாம் தாண்டி, பொதுமக்கள் எல்லாம் நாம் படிக்கும் போது…. நம்முடைய வாழ்க்கையிலும் இதில் இருக்கக்கூடிய டூல்ஸ் நாம் செயல்பாட்டிற்கு கொண்டு வர நினைப்போம். மோடிஜி அவர்களுடைய டைம் மேனேஜ்மென்ட், டிசிப்ளின், மோடிஜியினுடைய விஷன், எக்ஸிகியூஷன் எபிலிட்டி, ஒரு ஒரு விஷயத்தையும் எப்படி அவர் செய்கிறார் என்று நாம்பார்க்க வேண்டும்,
நிறைய பேர் இங்கு இருக்கிறோம், கலந்து ஆலோசித்து இருக்கிறோம், வேறு வேறு தொழில் செய்யக்கூடிய வல்லுனர்கள் இருக்கிறோம், நாம் அனைவருக்கும் இந்த புத்தகத்தை படித்து முடிக்கும் போது நிச்சயமாக மாற்றம் இருக்கிறது. அதனால் தான் இந்த மோடி என்கின்ற புத்தகத்தை எடுத்துட்டு போக வேண்டும் என்று நாம் கட்சி நினைக்கிறது.
இது மூலம் நம் கட்சியை வளர்க்க வேண்டும். இதன் மூலமாக நம்ம கட்சி தொண்டர்களை படிக்க வைக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. மோடிஜி ஐயாவை பற்றி எல்லோருக்கும் தெரியும். அதிலும் குறிப்பாக இந்த சாப்டர் சொல்லாமல் நான் முடித்தால் நன்றாக இருக்காது என தெரிவித்தார்.
Post Views:
0