“லெஜெண்டை கலாய்ப்பவர்களுக்கு கார்த்திக் பதிலடி”…. இணையத்தில் பதிவு….!!!!!


லெஜண்ட் திரைப்படத்தை பார்த்து விமர்சிப்பவர்களுக்கு பதிலடி தந்துள்ளார் கார்த்திக் குமார்.

ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில் சரவணன் அருள் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் தி லெஜண்ட். இத்திரைப்படத்தை பார்த்துவிட்டு பலரும் இணையத்தில் அவருக்கு நடிப்பு வரவில்லை என விமர்சித்தார்கள். இந்த நிலையில் கார்த்திக் குமார் திரைப்படத்தை பார்த்துவிட்டு தனது பேஸ்புக் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது, லெஜண்ட் படத்தை பார்த்தேன். திருவிழாவுக்கு வரும் மாஸ் கமர்ஷியல் ஹஸ்புல் ஃபேமிலி எண்டர்டெயின்மெண்ட் படங்கள் போன்று லெஜென்டிலும் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை.4 சண்டைக்காட்சி, 4 பாடல்கள், 6வில்லன்கள், காமெடி, 2 ஹீரோயின்கள், ஒரு ஐட்டம் கேர்ள் சொம்பு தூக்கும் கேரக்டர் ஆர்டிஸ்ட்கள், ஓகே. அதனால் ஹீரோவால் நடிக்க முடியவில்லை. அதனால் என்ன மெதுவாக அவர் தன் தரத்தை உயர்த்திக் கொள்வார்.

நாம் நம் தரத்தை விரைவில் குறைத்துக் கொள்வோம். பின்னர் அதுவே பழகிவிடும். தியேட்டரில் படத்தையும் லெஜெண்டையும் பார்த்து மக்கள் சிரிப்பதை பார்க்கும் பொழுது நாம் எல்லாம் எவ்வளவு போலியாக இருக்கின்றோம் என்பதை உணர்ந்தேன். ஏற்கனவே நன்றாக இருந்த உலகத்தை பல ஹீரோக்கள் காப்பாற்றுவதை பார்த்திருக்கின்றோம்.

நமக்கு எதையாவது பார்த்து சிரிக்க வேண்டும். நம் கட்டுப்பாட்டில் இல்லாதவற்றையும் பார்த்து சிரிக்க பயம். இவரும் தன் பவர் மற்றும் பணத்தை வைத்து சரி செய்து விடுவார். அதன் பிறகு நாம் வேறு ஒருவரின் பக்கம் திரும்ப வேண்டும். யார் வேண்டுமானாலும் மாஸ் ஹீரோவாகலாம் என்பதை இப்படம் நிரூபித்திருக்கின்றது. அதை ஏற்றுக்கொள்ள நமக்கு பொறுமையும் சகிப்புத்தன்மையும் வேண்டும். போகப் போக பழகிவிடும் பாஸ் என கூறியுள்ளார்.

 

The post “லெஜெண்டை கலாய்ப்பவர்களுக்கு கார்த்திக் பதிலடி”…. இணையத்தில் பதிவு….!!!!! appeared first on Seithi Solai.

Leave a Reply

Your email address will not be published.