காவிரி கதவணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு…. மக்களுக்கு திடீர் எச்சரிக்கை அறிவிப்பு….!!!!


தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதை தொடர்ந்து கர்நாடக மாநிலத்தில் அதிக அளவில் மழை பெய்து வருகிறது. அதனால் தமிழகத்தில் காவிரி ஆற்றில் நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருகின்றது. இந்நிலையில்  கரூர் மாவட்டம் மாயனூர் காவிரி கதவணைக்கு நீர்வரத்து அதிரடியாக அதிகரித்துள்ளது.

நேற்று வரை 44,955கன அடியாக இருந்த நீர் வரத்தை இன்று வினாடிக்கு 67 ஆயிரத்து 911 கனஅடியாக அதிகரித்துள்ளது. நான்கு பிரதான வாய்க்கால்களில் 1120 அடி நீரும் காவிரி ஆற்றில் 66 ஆயிரத்து 791 கன அடி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும் படியும் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் எனவும் மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

The post காவிரி கதவணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு…. மக்களுக்கு திடீர் எச்சரிக்கை அறிவிப்பு….!!!! appeared first on Seithi Solai.

Leave a Reply

Your email address will not be published.