காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பசுவந்தனை பகுதியில் ஒண்டிவீரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கவியரசன் என்ற மகன் உள்ளார். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவரும் ஜெகவீரபாண்டியபுரம் கிராமத்தில் வசிக்கும் மகாலட்சுமி என்பவரும் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் இருவரும் பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டுள்ளனர். இந்த தம்பதியினருக்கு 3 மாத பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் மகாலட்சுமி அடிக்கடி தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று வந்துள்ளார்.
இதற்கு கவியரசு எதிர்ப்பு தெரிவித்ததால் அவர்களுக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து சிறிது நேரத்தில் கவியரசன் வெளியே சென்று விட்டார். அதன்பின் மகாலட்சுமி சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த பசுவந்தனை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மகாலட்சுமியின் உடலை கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
The post பெற்றோர் வீட்டிற்கு செல்ல எதிர்ப்பு…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!! appeared first on Seithi Solai.