ஆடிப்பூரம் திருவிழா: தெப்பக்குளக்கரையில் கற்பகம்பாளுக்கு தீர்த்தவாரி…. பக்தர்கள் சுவாமி தரிசனம்…..!!!!!


ஆடி மாதத்தில் வரும் விசேஷங்களில் முக்கியமான திருவிழா ஆடிப்பூரம் ஆகும். ஆடிமாதத்தில் வரக்கூடிய பூரம் நட்சத்திர நன்னாளில் உமா தேவி அவதரித்ததாகப் புராணங்கள் கூறுகிறது. திருமணமாகாத பெண்கள் இந்த நாளில் அம்பாளையும், ஆண்டாளையும் வழிபட்டால் அவர்களுக்கு நல்ல வரனமைந்து விரைவில் திருமண யோகம் உண்டாகும் என நம்பப்படுகிறது. அந்த அடிப்படையில் நேற்று சைவ கோயில்களில் அம்பாளுக்கும், வைணவ கோவில்களில் ஆண்டாளுக்கும் சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. சென்னை மயிலாப்பூரிலுள்ள கபாலீசுவரர் கோயிலில் தெப்பக்குளக் கரையில் கற்பகம்பாளுக்கு தீர்த்தவாரியும், சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது.

அதன்பின் மாட வீதிகளில் அம்பாள் வீதிஉலா நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து நேற்று மாலை அம்பாளுக்கு சந்தனக்காப்பு அலங்காரமும், இரவு வேளையில் அலங்காரமும் செய்யப்பட்டு இருந்தது. இதற்கிடையில் பிற அம்மன் கோயில்களில் அம்மனுக்கு சாத்தப்படும் வளையல்கள் பெண்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. அதேபோன்று திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் சிறப்பு அபிஷேகமும், மாலையில் ஆண்டாளுடன் சாமி மாட வீதிகளில் உலா நிகழ்ச்சியும் நடந்தது. அத்துடன் புரசைவாக்கம் வெள்ளாளர் தெருவிலுள்ள சீனிவாச பெருமாள் கோயிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு சீனிவாச பெருமாள் மற்றும் தாயார், ஆண்டாளுக்கு மலர் அலங்காரமும், சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது.

The post ஆடிப்பூரம் திருவிழா: தெப்பக்குளக்கரையில் கற்பகம்பாளுக்கு தீர்த்தவாரி…. பக்தர்கள் சுவாமி தரிசனம்…..!!!!! appeared first on Seithi Solai.

Leave a Reply

Your email address will not be published.