“முதல் முறையாக குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட பிரணிதா”…. பேபி சோ க்யூட்…. வாழ்த்தும் ரசிகாஸ்….!!!!!


தனது குழந்தையின் புகைப்படத்தை முதல் முறையாக நடிகை பிரணிதா வெளியிட்டுள்ளார்.

தமிழில் உதயன் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் பிரணிதா. இவர் கார்த்தியுடன் சகுனி, சூர்யாவுடன் மாஸ் என்ற படங்களில் நடித்து பிரபலமானவர். கடந்த ஆண்டு தொழில் அதிபர் நிதின் ராஜூவை திருமணம் செய்துகொண்டார். அண்மையில் இந்த தம்பதிக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட அவர் தனது குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்தார். இதைப்பார்த்த திரையுலகினர் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்கள்.

ஆனால் அவர் வெளியிட்ட புகைப்படத்தில் குழந்தையின் முகம் தெரியவில்லை. இந்த நிலையில் தனது குழந்தையின் முகம் தெரியும்படி எடுத்த புகைப்படத்தை முதல் முறையாக இணையத்தில் பதிவிட்டுள்ளார் பிரணிதா. மேலும் மகளுக்கு ஆர்னா என பெயர் வைத்திருப்பதாக கூறியுள்ளார். இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கூறியுள்ளதாவது, உங்களின் மகள் ரொம்ப க்யூட்டாக இருக்கின்றார். அப்படியே உங்களை போல இருக்கின்றார். ஆர்னா குட்டிக்கு வாழ்த்துக்கள் என கூறியுள்ளனர்.

https://www.instagram.com/pranitha.insta/?utm_source=ig_embed&ig_rid=e8764860-5cb7-4e05-9188-ed7cc56875df


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.