கல்லூரி வகுப்புகள் தொடங்கி அக்டோபர் 31-ம் தேதிக்குள் மாணவர்கள் கல்லூரியிலிருந்து விலகினால், அவர்கள் செலுத்திய முழுக்கட்டணத்தையும் திருப்பிக் கொடுத்து விட வேண்டும் என்று நாடு முழுவதுமுள்ள உயர்கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி உத்தரவிட்டுள்ளது. இது குறித்த சுற்றறிக்கையை நாடு முழுவதும் நாடு முழுவதும் உள்ள உயர் கல்வி நிறுவனங்களுக்கு யூசிஜி அனுப்பியுள்ளது.
மாணவர்கள் தங்கள் சேர்க்கையை ரத்து செய்வதற்கும் தனியாக கட்டணம் எதுவும் வசூலிக்கக் கூடாது. நுழைவுத் தேர்வு முடிவு வெளியாவதற்கு முன்பே கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்களுக்கு இந்த உத்தரவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். CUET பொது நுழைவுத் தேர்வு எதிர்கொள்ளும் மாணவர்கள் நலன் கருதி ucg இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
Post Views:
0