2 வது நாளாக தொடரும் ஐடி ரெய்டு…..!!!! • Seithi Solai


சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் தொடர்புடைய இடங்களில் இன்று 2ஆவது நாளாக வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, மதுரையில் அன்புச்செழியனுக்கு தொடர்புடைய 40-க்கும் மேற்பட்ட இடங்களிலும் வருமானவரித்துறையினர் நேற்று சோதனை நடத்தினர். மதுரையை சேர்ந்த அன்புச்செழியன் கோபுரம் பிலிம்ஸ் என்ற பெயரில் திரைப்படங்களை வெளியிட்டு வருகிறார். கடந்த 2020-ம் ஆண்டும் அன்புச்செழியன் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.