பாம்பு கடித்து வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அன்னாசமுத்திரம் பகுதியில் சடையன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அயினான்(30) என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் அயினான் வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது திடீரென வந்த பாம்பு அவரை கடித்தது.
இதனால் மயங்கி விழுந்த வாலிபரை குடும்பத்தினர் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அயினான் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Post Views:
0