மேயர்ஸ் அதிரடி…. 165 டார்கெட்…. இலக்கை எட்டுமா இந்தியா?

இந்திய அணிக்கு 165 ரன்களை இலக்காக நிர்ணயித்தது வெஸ்ட் இண்டீஸ்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியை இந்தியா முழுமையாக கைப்பற்றிய நிலையில், அடுத்ததாக டி20 தொடரில் இரு அணிகளும் விளையாடி வருகிறது. முதல் 2 போட்டி முடிவடைந்த நிலையில், இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்றுள்ள நிலையில், இன்று மூன்றாவது டி20 போட்டி வார்னர் பார்க்கில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிராண்டன் கிங் மற்றும் கைல் மேயர்ஸ் இருவரும் களமிறங்கினர். தொடக்கம் முதலே மேயர்ஸ் அதிரடி காட்ட நல்ல வலுவான தொடக்கம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கிடைத்தது.

அதன்பின் 20 ரன்கள் எடுத்திருந்த பிராண்டன் கிங்கை 20 போல்ட் செய்து வெளியேற்றினார் ஹர்திக் பாண்டியா.. அதனை தொடர்ந்து கேப்டன் பூரான் மற்றும் மேயர்ஸ் இணைந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆடி வந்த நிலையில் பூரான் 14.4 வது ஓவரில் 22 ரன்னில் புவனேஸ்வர் குமார் பந்து வீச்சில் ரிஷப் பண்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். கடைசியில் அதிரடியாக ஆடிய மேயர்ஸ்சும் 50 பந்துகள் 73 ரன்கள் எடுத்திருந்த நிலையில் (8 பவுண்டரி 4 சிக்ஸர் ) புவனேஸ்வர் குமார் பந்து வீச்சில் ரிஷப் பண்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

கடைசியாக சிம்ரன் ஹெட் மேயரும் (20 ரன்கள்), ரோவ்மன் பவலும் (23 ரன்கள்) அதிரடியாக அடித்து ஆட்டமிழக்க வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழந்து 164 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக புவனேஸ்வர் குமார் 2 விக்கெட்டுகளும், பாண்டியா, அர்ஷ்தீப் சிங் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதனை தொடர்ந்து இந்திய அணி களமிறங்கி ஆடி வருகிறது.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.