வாழ்க்கையில் விரக்தியடைந்த விவசாயி…. திடீரென எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!


விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள அறியப்பாடி கிராமத்தில் விவசாயியான வேல்முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு காமாட்சி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு குழந்தைகள் இல்லை. இந்நிலையில் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக காமாட்சி அவரது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த வேல்முருகன் கடந்த 24-ந் தேதி விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் வேல்முருகனை உடனடியாக மீட்டு ஆரணி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி வேல்முருகன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.