ஓடும் பேருந்தில் பெண்ணிடமிருந்து பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அம்மாபட்டியில் ராமர்-பார்வதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பார்வதி உறவினரிடம் 2 லட்ச ரூபாயை கடனாக வாங்கியுள்ளார். அதில் 1 லட்ச ரூபாயை திருப்பி கொடுப்பதற்காக பார்வதி பேருந்தில் சிவகாசிக்கு சென்றுள்ளார்.
பின்னர் அங்கிருந்து வேறு பேருந்தில் ஆலங்குளம் செல்ல முயன்ற போது, தான் கொண்டு சென்ற பையில் இருந்த 1 லட்ச ரூபாய் பணம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து பார்வதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் பேருந்தில் வைத்து பெண்ணிடமிருந்து பணத்தை திருடி சென்ற மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
Post Views:
0