தூத்துக்குடியில் ஆடு திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தார்கள்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள லெவிஞ்சிபுரத்தை சேர்ந்த கண்ணன் என்பவர் ஆடு வளர்த்து வருகின்றார். இவர் சென்ற 31 ஆம் தேதி ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பொழுது மர்ம நபர்கள் அவரின் ஆடுகளை திருடி சென்று விட்டார்கள். இதையடுத்து கண்ணன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அதன் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்கள். அப்பொழுது அப்பகுதியில் இருக்கும் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து பொழுது முருகன், சின்னதுரை உள்ளிட்டோர் ஆடுகளை திருடியது தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்த 15,000 மதிப்புள்ள ஆடுகளை மீட்டார்கள்.
Post Views:
0