அல்கொய்தா தலைவர் சுட்டுக்கொலை…. வரவேற்பு தெரிவித்த அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமா …!!!!


உலகநாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருந்து வரும் பயங்கரவாத அமைப்பு அல்கொய்தா. இந்த அமைப்பின் தலைவராக இருந்துவந்த ஒசாமாபின் லேடனை அமெரிக்காவின் சீல் படையினர் அதிரடியாக பாகிஸ்தானில் வைத்து சுட்டுக்கொன்றனர். இதையடுத்து இந்த அமைப்பு தங்களது செயல்பாடுகளை குறைத்துக் கொண்ட நிலையில் மீண்டுமாக தலைதூக்க தொடங்கினர். இப்போது அந்த பயங்கரவாத அமைப்புகளை ஒடுக்கும் வகையில் அமெரிக்க படைகள் தரை வழி மற்றும் வான்வழி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த சூழ்நிலையில் ஆப்கானிஸ்தான் நாட்டில், அமெரிக்காவின் சிஐஏ ஆள் இல்லா விமானம் நடத்திய தாக்குதலில் அல்கொய்தா தலைவரான அய்மன் அல்ஜவாஹிரி நேற்று கொல்லப்பட்டார்.

இந்நிலையில் அய்மன் அல்-ஜவாஹிரி கொல்லப்பட்டதற்கு அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமா வரவேற்பு தெரிவித்து இருக்கிறார். இது தொடர்பாக ஒபாமா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் “செப்டம்பர் 11 தாக்குதலுக்கு 20 வருடங்களுக்கு பின் அந்த பயங்கரவாத தாக்குதலின் மூளையாக செயல்பட்டவர்களில் ஒருவரும், அல்-கொய்தாவின் தலைவரான அய்மான் அல்-ஜவாஹிரி இறுதியாக நீதியின் முன் நிறுத்தப்பட்டு உள்ளார். இதற்கிடையில் அதிபர் பைடனின் தலைமைக்கு பாராட்டுக்கள். இந்த தருணத்துக்காக பல்வேறு தசாப்தங்களாக உழைத்த உளவுத் துறை அதிகாரிகள் தங்களில் ஒருவருக்குகூட சிறிய பாதிப்பும் இன்றி இதை நிகழ்த்தி காட்டியுள்ளனர்” என தெரிவித்துள்ளார்.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.