இன்சூரன்ஸ் பாலிசி விதிகளில் அதிரடி மாற்றம்…. இதெல்லாம் மாறப்போகுது…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!


இன்சூரன்ஸ் தொடர்பாக பல மாற்றங்களை கொண்டு வருவதற்கு IRDAI இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை ஆணையம் திட்டமிட்டுள்ளது. இந்த புதிய மாற்றங்கள் இன்சூரன்ஸ் பாலிசிதாரர் மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் என இரு தரப்பினருக்கும் சாதகமாக அமையும். அதாவது இன்சூரன்ஸ் பாலிசிகளை டி-மாட் வடிவில் வைத்து பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. டி-மாட் என்றால் பங்குகள், மியூச்சுவல் ஃபண்ட் ஆகியவை டி-மார்ட் கணக்கில் வைத்துக் கொள்ளப்படும். பங்குகளை வாங்கினாலும் விற்றாலும் இந்த கணக்கு வழியே பரிவர்த்தனை நடைபெறும்.

இந்நிலையில் பங்குகளைப் போலவே இன்சூரன்ஸ் பாலிசிகளை இந்த வடிவில் பயன்படுத்த அனுமதி அளிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. டி மார்ட் கணக்கு மட்டுமல்லாமல் பாலிசிதாரர் வங்கி கணக்குடன் இன்சுரன்ஸ் பாலிசி இணைக்கப்பட்டிருக்கும். அதனால் ஒரு நேரடி ஆவணமாக உள்ள உங்களது இன்சூரன்ஸ் பாலிசி ஆன்லைன் ஆவணமாக மாறிவிடும். இதனால் பேப்பர் வேலைகள் குறைந்து பாலிசியை புதுப்பிப்பது எளிதாகும். இதன் மூலமாக பாலிசிதாரர் மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் என இரு தரப்பினரும் பயனடைய முடியும். கூடுதல் செலவுகளை குறைக்கலாம் எனவும் கூறப்படுகிறது.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.